கவி - மதி - லேசர்

"அவனை ஏதாவது செய்ய வேண்டும்" என்றாள் கவி

"யாரை என்ன செய்யணும்?" அருகில் உட்கார்ந்து இருந்த மதி கேட்டாள்

     "அதான் அந்த கணேஷை......போனதடவையும் எனக்கு போட்டியாக அவன்தான் வந்து ஜெயித்தான்.. கண்டிப்பாக இந்த முறையும் அவன் வருவான்"..என்றாள் கவி

"அதுக்கு நீ அவனை என்ன செய்யபோறே?"

     "முதலில் அவன் எப்படி  என்னைவிட நல்லா கதை எழுதுறான் என்று  பர்ர்க்கவேண்டும்,போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கு அவன் கண்டிப்பா அதுக்கு உண்டான கதையை எழுதி இருப்பான் அந்த கதையை தெரிந்துவிட்டால் அதைவிட நான் நன்றாக எழுத முடியும்.".என்றாள் கவி

     "முடிந்தால் அவனைவிட நன்றாக எழுத முயற்சிசெய் அதைவிட்டுவிட்டு அவனைபோய் ஏதாவது செய்யப்போகிறேன் என்கிறாய்" என்றாள் மதி

    "அவனை ஒன்றும் செய்யபோவதில்லை அவன் இல்லாத நேரத்தில் அவனது அறைக்குள் சென்று அந்த கதையை படித்துவிட்டு அல்லது அழித்துவிட்டு வரப்போகிறேன்" என்றாள் கவி

     "இதை விட என்னிடத்தில் ஒரு நல்ல விசயம் இருக்கின்றது ஆனால் அது இப்போ உனக்கு உதவாது" என்றாள் மதி

"அது என்ன விசயம் ?"

       "நீ அவனை முதலிலேயே காதலித்து இருக்க வேண்டும்... அப்படி காதலித்து இருந்தால்...  எப்படி அவன் கதை எழுதுவான் அதுவும் உனக்கு போட்டியாக..அவனுக்கு உன் பின்னால் சுற்றவே நேரம் இருந்து இருக்காது..உன்னை பற்றி கவிதைவேண்டுமானால் எழுதவாய்ப்பு இருக்கின்றது .".

     "அதையெல்லாம்  முயற்சி செய்து பார்த்துவிட்டேன் அவன் என்ன காதலிக்க ".................?" , நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை...மறுத்துவிட்டான்....அதான் இந்தமுடிவு" என்றாள் கவி

"சரி என்னாவது செய்" என்றாள் மதி

     "இதுக்கு உன்னுடைய உதவியும் வேண்டும் நான் எப்படி தனியாக செய்வது" என்றாள் கவி

     "நான் வரமாட்டேன் என்றால் நீ விடவா போறே சரி எப்போ அவன் அறைக்குள் போகனும்னு நீ முடிவு பண்ணி வச்சு இருப்பியே?"

     "ஆமாம் ... அவன் அலுவலகத்துக்கு போனபிறகுதான் நாம் போய் வேலையை முடிக்கவேண்டும்... நமக்கு தேவையான நேரம் கொஞ்சம்தான்..நீ என்னுடன் இருந்தால் மட்டும் போதும் மத்ததை நான் பார்த்துகொள்கிறேன்" என்றாள் கவி

      ஒருவழியாக யாருக்கும் சந்தேகம் வராமல் கணேஷின் அறைக்கு வந்து இருந்தார்கள்...கவி ஏற்க்கனவே தயாராக பல சாவிக்கள் அடங்கிய ஒரு கொத்தை தனது கைப்பைக்குள் மறைத்து எடுத்து வந்து இருந்தாள்...அதில் ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்க்க கதவு திறந்தது...

     உள்ளே நுழைந்த இருவரில் கவி கணேஷ் கதை எதில் எழுதி இருக்கிறான் என்று தேட..மதி அறையை நோட்டம விட்டாள்...

       "இவ்வளவு புத்தகமா...இவனுடைய அறைக்கு திருடன் வந்தால்கூட ஏதாவது பாவம் பார்த்து வைத்துவிட்டு போவானே தவிர எதையும் திருடமாட்டான்...அழுக்கு துணியையும்,புத்தகத்தையும் தவிர ஒண்ணுமே இல்லை" என்றாள் மதி

அதை காதில் வாங்காமல் எதையோ கவி படித்து கொண்டு இருந்தாள்..

"என்ன படிக்கிறே?" என்றாள் மதி

"என்னால் நம்பவே முடியல இது எப்படி சாத்தியம்?" என்றாள் கவி

"அப்படி என்ன எழுதி இருக்கான்?"

     "நாம் இருவரும் இங்கு வருவதை அவன் முன்கூட்டியே கதையாக எழுதி இருக்கிறான்..இதுதான் அந்த போட்டிக்கான கதையும் கூட" என்றாள் ஆச்சர்யத்துடன் கவி


"அப்படியா நமது பெயரையும் சரியாக சொல்லி இருக்கிறானா என்ன?"


    "இல்லை பெயரை தவிர்த்து எல்லாம் சரியாக சொல்லி இருக்கிறான்...இதோ நீயே பாரேன" என்று சொல்லி அவளிடம் காட்டினாள்..

    அந்த கதையில் கவி, மதியும் அறைக்குள் நுழைந்தவரை சரியாக இருந்தது......அதற்கு பிறகு ஒரு கடைசி பத்தி.... அதோடு கதையை முடித்து இருந்தான்...அதை இருவரும் மிக ஆர்வமாக படிக்க ஆரம்பித்தார்கள்..

     உள்ளே நுழைந்த இருவரும்  டைரியை எடுத்து அதில் உள்ள கதையை படித்து கொண்டு இருந்தார்கள்..அவர்களுக்கு தெரியாது..... அந்த டைரி இருந்த இடத்திற்கு கிழே ஒரு சென்சார் இருப்பதும்..அதை எடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த இடத்தில வேறு எதையாவாது வைக்கவில்லை என்றால் அங்கு பக்கவாட்டில் இருக்கும் லேசர் சாதனம் உயிர்பெற்று லேசர் ஒளிக்கதிரை பாய்ச்சும் என்று...

கவி கதையை படித்து முடிக்கும் போது சரியாக ஐந்து நிமிடம் ஆகியிருந்தது....

10 comments:

சௌந்தர் said...

அட பாவிங்களா இப்படி எல்லாம் கதை எழுத யாருக்காவது தோணுமா....கதையை திருட இந்த உனக்கு எப்படி தோணியது உனக்கு அனுபவமா உன் கதையை யாரவது திருடி விட்டார்களா இல்லை நீ......

கணேஷ் said...

Blogger சௌந்தர் said...

உன் கதையை யாரவது திருடி விட்டார்களா இல்லை நீ.../////


என் கதையை படிக்கவே பெரும்பாடு படுவார்கள்..இதில் எங்கே திருடபோகிறார்கள்....))))

நான் எழுதும் எல்லா கதைகளில் என் சொந்த சோக கதையும் சேர்ந்து இருக்கும்...அதனால் யாரும் நான் திருடி இருக்கிறேன் என்று சொல்ல முடியாது)))))))

கருடன் said...

//அங்கு பக்கவாட்டில் இருக்கும் லேசர் சாதனம் உயிர்பெற்று லேசர் ஒளிக்கதிரை பாய்ச்சும் என்று...//

அப்பொ அந்த பச்ச புள்ளைங்கள போட்டு தள்ளிட்டிங்களா?? ஒரு கதைக்கு கொலையா??

கணேஷ் said...

அப்பொ அந்த பச்ச புள்ளைங்கள போட்டு தள்ளிட்டிங்களா?? ஒரு கதைக்கு கொலையா??////

இல்லை...லேசெர் ஒளியில பல வகைகள் இருக்கின்றன...மிக அடர்த்தி கொண்டது ..குறைந்தது...அடர்த்தி குறைந்தது ஒன்றும் செய்யாது....

எப்படியெல்லாம் சாமளிக்க வேண்டியுள்ள்ளது...

சரி அந்த பச்சை புள்ளைங்க மீது என்ன அக்கறை)))))

குறையொன்றுமில்லை. said...

இந்தக்கதையைத்திருட அதில் என்ன இருக்கு??????????

கணேஷ் said...

Lakshmi said...

இந்தக்கதையைத்திருட அதில் என்ன இருக்கு??????????/////

அதானே...அப்படி என்ன இருக்கு...எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு...அதை கதையை எழுதிய கணேஷிடம் கேட்போம் வரட்டும்)))))

கணேஷ் said...

Lakshmi said...

இந்தக்கதையைத்திருட அதில் என்ன இருக்கு??????????////

இது போட்டிக்காக அவன் எழுதிய கதை அதான் இதை திருட நினைக்கிறார்கள்...

Unknown said...

நல்லா இருக்கு நண்பா! :-)

ஆனந்தி.. said...

லக்ஷ்மி ஆன்டி...கணேஷ் கடைசியில் சொன்ன லேசர் கதிர்கள் அபாயகரமானவை...அது உடம்பில் பாய்ந்தால் உயிரையும் எடுக்கலாம்...அதன் தரம்,வீச்சு பொறுத்து அமையும்....இந்த கதையில் என் தம்பி சொல்ல நினைத்தது...சென்சர் அமைப்பு மூலம் இவர்கள் திருட்டை கண்டுபிடித்ததும்,மிரட்டுவதற்க்கும்,சுவாரச்யத்திர்க்கும் லேசரை பொருத்தியதும் தான்...இன்னும் புரியாட்டி கணேஷ் ஐ விடாதிங்க...:)))

கணேஷ் said...

.இன்னும் புரியாட்டி கணேஷ் ஐ விடாதிங்க...:)))///

ம் ம் ..எப்படி கணேஷை விட முடியும்))))