"செல்"லும்..சொல்லும் 2

  இதை பார்த்துக்கொண்டு இருந்த நிஷியின் ஆர்வம் அடுத்தது  என்ன என்றுதான்

    ஆனால் அதற்குள் அந்த கூட்டம் புனிதாவை விட்டு விட்டு அங்கு இருந்த போலீசை நோக்கி சென்றதை பார்த்தது.

     இவர்கள் ஒன்றும் புதியதாக சொல்லபோவதில்லை ...நாங்கள் விரைவில் கண்டுபிடிப்போம் என்பதைத்தான் இப்போது சொல்வார்கள் என்று நினைத்துகொண்டே கட்டிலை நோக்கி சென்றது..

  “கணேஷ் எந்திரி கொஞ்சம் முக்கியமான விஷயம்” என்றது தனது மெல்லிய குரலில்..

   அவனிடம் இருந்து எந்தவித சலனமும் இல்லை...தனது சிறிய பற்களால் அவன் போர்த்தியிருந்த போர்வையை பிடித்து இழுத்தது..

  “நாயே உனக்கு தினமும் காலையில் இதே வேலைதான்” என்று நிஷியை திட்டியபடியே முழித்து பார்த்தான்..”இப்ப என்ன உனக்கு பிரச்சினை?” என்றான்

“எனக்கு இல்லை நமக்கு?”

“என்ன?”

“இதை பார்” என்று தொலைக்காட்சியை காட்டியது.

இன்னும் அந்த ஆய்வுக்கூட விவகாரம் போய்கொண்டு இருந்தது..

“இதுக்கு என்ன தினமும் நமது நகரத்தில் எங்காவது ஒரு இடத்தில நடப்பதுதானே?” என்றான்

“இல்லை கணேஷ் இது கொஞ்சம் வித்தியாசமானது”..என்று நிஷி பார்த்த விசயங்களை சொன்னது.

இப்போது தூக்கம்  முழுதும் களைந்த கணேஷ்”இது உண்மையில் சாத்தியமா நிஷி? என்றான்

“நானும் எனது இயற்கை செயற்கை அறிவை வைத்து பார்த்தால் சாத்தியம்தான் என்றது” நிஷி

“இவ்வளவு அருமையான அறிவைக்கொண்ட ஒருவரை யார் ஏன்? கொல்லவேண்டும்?” என்றான்

  “இந்த மனிதர்களே இப்படித்தான் எங்கு அறிவு சம்பந்தப்பட்டவை எழுகின்றதோ அதை ஏதாவது ஒரு காரணம் காட்டி முடக்குவதே உங்களது வேலை” என்றது

  “நிஷி இப்பொது நமது சண்டைக்கு வேலை இல்லை...நீ சொல்வது போல இது நாட்டுக்கு கொஞ்சம் முக்கியமான விஷயம்தான்..அந்த அழியாத செல்கள் தவறானவர்களின் கையில் கிடைத்தால் விஷயம் கொஞ்சம் சிக்கலாக மாறும்” என்றான்.

“சரி விடு அதற்க்குத்தனே நாம் இருக்கின்றோம்...கிளம்பு போய் பார்க்கலாம்” .

  “இல்லை நிஷி இதுவரை நமக்கு அங்குபோக முறையான தகவல் எதுவும் வரவில்லை பின் எப்படி நாம் போவது”

  “எப்படி என்றாலும் இந்த விஷயம் உனது பார்வைக்குத்தான் வரும் அதான் சொன்னேன் நீ எதற்கும் கிளம்பு அதற்குள் என்ன நடக்கின்றது என்று பார்க்கலாம்” என்றது நிஷி.

   கணேஷ் கிளம்பும் நேரத்தில் தனது இயற்கை மற்றும் செயற்கை மூளையில் அந்த செல்கள் சம்பந்தமாக சில விசயங்களை தேடி கொண்டு இருந்தது.

  கணேஷ் சாப்பிடும்போது நிஷிவுக்கும் கொஞ்சம் பாலும, அதில் சாதம் போட்டான்...அந்த நேரத்தில் அவனுடைய மேலாதிகாரியிடம் இருந்து அழைப்பு...நிஷி சொன்னது போலவே அவனை அந்த செல் பிரச்சினையை கையாளும்படி கட்டளை கொடுக்கப்பட்டது..

   எப்போதும் ....சிறிய அளவில் இருக்கும் நிஷியை எடுத்துசெல்ல உபோயோகபடுத்தும் சில பட்டைகளால் ஆன சிறு  பையில் நிஷியை போட்டு கணேஷ் அந்த இடம் நோக்கி கிளம்பினான்.




   அதே நேரத்தில் அந்தஅழியா செல்கள் கொண்ட அந்த பெட்டி மேசையின் மீது வைக்கப்பட்டு இருக்க அதை சுற்றி மூன்று பேர் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருந்தார்கள்..

   அதில் ஒருவன் சற்று கோபமாய்”உனக்கு கொடுக்கப்பட்ட வேலை இந்த பெட்டியை கொண்டுவருவது மட்டுமே நீ ஏன் ஆளை கொன்றாய்?” என்றான்.

    “நானும் திட்டமிட்டபடி பெட்டியை மட்டும்தான் எடுக்கலாம் என்று நினைத்தேன்..அதை திறந்து ஒரு முறை அந்த செல்கள் இருக்கின்றதா இல்லையா என்பதை உறுதி செய்ய அதை திறக்கலாம் என்று முயலும்போதுதன் எனக்கு தெரிந்தது இது ஒரு ரகசியமான முறையில் பூட்டபட்டிருந்தது...எப்படி திறப்பது என்று அந்த ஆளிடம் கேட்டேன். உங்களை போன்றவர்களுக்கு இது கிடைக்ககூடாது என்பதர்க்காகத்தான் இதை ரகசிய எழுத்துக்களால் தான் மூடி இருப்பதாக சொன்னான்”..

   “நான் முதலில் அவனிடம் அந்த எழுத்துகளை நீ சொல்லிவிடு இல்லை என்றால் உயிர் போய்டும் என்று மிரட்டி பார்த்தேன் ஆனால் அவன் மசியவில்லை...என்னையும் பார்த்து விட்டான் அதான் கொன்றுவிட்டேன்” என்றான்.

   மற்றொருவன் “சரி நடந்தது நடந்துவிட்டது..இப்பொது இந்த செல் பெட்டியை என்ன செய்வது..இதை திறப்பது என்பது முடியாத காரியம் அது நமக்கு தேவை இல்லாத ஒன்றும்கூட...நமது நோக்கம் இவர்களின் இந்த இறக்காத செல் கண்டுபிடிப்பு மரணம் இல்லாத உயிரை உருவாக்க உதவும் ..இது நமது கடவுளின் கொள்கைக்கு எதிரானது அதை தடுக்கத்தான் நாம் இதை செய்தோம்..எனவே இந்த பெட்டியை எப்படியாவது அழித்து விடுவது நல்லது..”என்றான்.


  சிறிது நேரம் அவர்களுக்குள் விவாதம் நடந்து முடிவாக அந்த பெட்டியை பாதுகாப்பாக வைத்து இருப்பது ...அந்த கொலை விஷயம் இவர்களின் மீது சந்தேகம் இன்றி முடியும் வரை..அதற்கு பிறகு அழித்து விட முடிவு செய்தனர்..ஒருவேளை அந்த விசாரைனையில் இந்த பெட்டியை திறக்கும் அந்த எழுத்துக்கள் தெரியவந்தால்...........இதுதான் அவர்கள் அந்த பெட்டியை வைத்து இருக்க காரணம்.



கணேஷ் அந்த இடத்தை அடைந்து அங்கு இதுவரை விசாரணை செய்துகொண்டு இருந்தவரிடம் சில விசயங்களை கேட்டுவிட்டு அவரை விலகி சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றான்.

   அவனது பையில் இருந்த நிஷி அதனுடைய ஒரு செயற்கை கண்ணால் அந்த இடத்தை படம் பிடித்து தனது செயற்கை நினைவுப்பகுதியில் பதிவு செய்தது..வெளியில் இருந்து பார்க்க அதன் இரு கண்கள் ஒரே மாதிரி இருந்தாலும் அதில் ஒன்று ஒரு சென்சார் போல செயல்படும்,சமயங்களில் கேமரா என சில சிறப்பான வேலைகளை செய்யும்...அப்படி எடுக்கப்படும் பதிவுகள் நேராக அதன் மூளையோடு இணைந்து செயல்படும்விதமாக பொருத்தப்பட்டுள்ள செயற்கை நினைவுபகுதிக்கு செல்லும்...

  தேவையான போது செயற்கை மூளையில்  இருந்து தகவல்களை பெற்று அதனுடைய இயற்கை மற்றும் பிராதன மூளையை வைத்து நிஷியால் இயங்கமுடியும்....

   சடலம் கிடந்த இடத்தை சுற்றி பார்த்த கணேஷ் அவரது சொந்த அறையும் பார்த்தான்..”நிஷி ஏதாவது உனக்கு கிடைச்சிதா? எனக்கு ஒன்றும் விளங்குற மாதிரி இல்லை” என்றான்.


“இப்போதைக்கு நானும் உன் கட்சிதான் யாரிடமாவது பேசிப்பார்” என்றது நிஷி

  அங்கு உள்ளவர்களிடம் சில தகவல்களை பெற்றான் எல்லோரும் பயத்தில் இருந்தனர்..குற்றவாளிகள் யாரும் கிடைக்கவில்லை என்றால் இந்த போலீஸ் நம்மளை உள்ளே போடுமே என்ற எண்ணம்தான்..

   அவன் பெற்ற தகவல்களில் புனிதாவை பற்றியும் உண்டு...அவளை காணவேண்டும் என்று சொல்ல...வந்தாள்

  அவளை பார்த்த கணேஷ் ஒரு நிமிடம் எதுவும் கேட்காமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்...இந்த நிலையில் இவ்வளவு அழகான பெண்ணா என்று...

 புனிதா அவனின் பார்வையின்  அர்த்தம புரியாமல் தலையை குனிந்து கொண்டாள்..

  வழக்கமாக கேட்கும் சுய அறிமுக கேள்விகளை கேட்கும்போது அவளின் வயதையும்,திருமணம் ஆகவில்லை என்பதை கேட்டவுடன்..அவனுக்குள் கொஞ்சம் சந்தோசம்..

“இவள்தான் முக்கியமானவள் இவளுக்கு அந்த செல் பற்றி எல்லாம் தெரியும்” என்றது நிஷி

  இதை கேட்ட புனிதா அந்த சோதனையிலும் நிஷியை ஆச்சர்யமாக பார்த்தாள் எப்படி இந்த நாய் பேசுது என்று?

  கணேஷ் தேவையான தடையங்கள் ஏதும் கிடக்கின்றதா என்று பார்த்து விட்டு அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடிவெடுத்தான்..

   அந்த ஊழியர்கள் சில நிபந்தனைகளின் பெயரில் வீட்டிற்கு செல்ல அனுமதிக்க பட்டனர். புனிதாவை தவிர...

  “நீங்கள் கொஞ்ச நேரம் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொன்னால் எனக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்” என்றான்

அவள் எதுவும் சொல்லாமல் சரி என்ற அர்த்தத்தில் தலையை மட்டும் ஆட்டினாள்.

  அங்கு இருந்த ஒரு அறையில் நிஷி  மேசையின் மீது வைக்கப்பட்டு இருக்க இருவரும் எதிர் எதிராக அமர்ந்தனர்..

  “உங்களின் முகத்தில் அதிக பயம் தெரிகின்றது..அது தேவையில்லை..நான் ஒன்றும் செய்ய மாட்டேன் ..நீங்கள் நிறபறாதி என்றால்..”என்றான்

“அப்படி என்றால் நீங்கள் என்னைத்தான் சந்தேகபடுகின்றிர்களா?” என்றாள் அழுகின்ற குரலில்...


  இதை பார்த்த கணேஷ்க்கு பாவமாக இருந்தது..இப்படி ஒரு நல்ல பெண் இந்த பிரச்சினையில் ஏன் மாட்டிக்கொண்டாள்...ஒருவேளை எனக்காக இருக்குமோ என்றும் நினைத்தான்...

“அந்த செல்களை பற்றி தகவல் கிடைக்குமா ?"என்றது  நிஷி.

அதற்கு பதில் சொல்லாமல் “இந்த நாய் எப்படி பேசுது?” என்றாள் கணேஷ்டம்..

   “இது கொஞ்சம் வித்தியாசமான நாய்..இப்போதைக்கு அது கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல் அப்புறம் இந்த நாயை பற்றி ஆராயலாம்” என்றான்..

"சரி இந்த நாய்க்கு நான் எப்படி புரிய வைப்பேன்?" என்றாள்

"அந்த கஷ்டம உனக்கு வேண்டாம்....அந்த தகவல்கள் எங்கு இருக்கின்றது என்பதை மட்டும் சொல்"

"எல்லா தகவலும் அவரது சொந்த கணினியில் இருக்கு" என்று சொல்லி அங்கு கூட்டி சென்றாள்

"கணேஷ் இந்த செல்லுக்கான தகவலை மட்டும் தனியாக பிரித்து எனது செயற்கையான நினைவுபகுதியில் பதி" என்றது நிஷி

கணேஷ் மெதுவாக நிஷியை தூக்கி தலையை கொஞ்சம் திருப்பி அதன் காதுக்கு அருகில் இருந்து ஒரு மெல்லிய தகடு அளவு இருக்கும் ஒரு சிப்பை உருவினான்...

இதை எல்லாம் அருகில் இருந்தது பார்த்துக்கொண்டு இருந்த புனிதா வியப்பாக நிஷியை பார்த்துகொண்டே அந்த தகவல்களை அந்த சிப்பில் ஏற்றிக்கொண்டு இருந்தாள்.

கணேஷ் அதை மீண்டும் நிஷிவுக்கு பொருத்திய பின்னர்..."எனக்கு இதனை கொஞ்சம் பிரித்து புரிந்துகொள்ள சில நிமிடங்கள் ஆகும என்று சொல்லி அந்த மேசையின் ஒரு இடத்தில உட்கார்ந்தது...

"கவலைபடாதே எப்படியாவது கொலைகாரனையும் அந்த செல்லையும் கண்டுபிடித்துவிடுவோம்" என்றான் புனிதாவிடம்

"அப்படியே என்னை கொஞ்சம் சீக்கிரம் விட்டுவிடுங்கள் பயமாக இருக்கு"என்றாள்

"பயப்படாதே எங்களுக்கு உதவத்தான் நீ இருக்கிறாய் அந்த செல்களை பற்றி நல்லா தெரிந்தவள் நீ மட்டும்தான் அதான் உன் உதவி எங்களுக்கு தேவை"என்றான்

"அந்த செலகளைபற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை..அப்படி ஒரு அமைப்பில்தான் அதை எங்கள் தலைவர் வைத்து இருந்தார்" என்றாள்

அதற்குள் நிஷி தனது வேலையை முடித்துவிட்டு அங்கு வந்து இருந்தது..

"அப்படி என்ன அமைப்பு அந்த செல்களுக்கு பாதுகாப்பாக?" என்றது நிஷி

"அதை நாங்கள் வளர்க்க சேமித்து வைக்க பயன்படுத்தும் அந்த பெட்டி போன்ற கருவி சிறப்பாக இதற்கு என்றே வடிவமைக்கப்பட்டது..செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு....அது சில ரகசிய எழுத்துக்களால் மூடப்பட்டது அந்த எழுத்துக்கள்  தலைவரை தவிர மற்றவருக்கு தெரியாது...அந்த எழுதுக்கள இல்லாமல் அதை திறப்பதோ ஏன் அழிப்பது கூட முடியாத காரியம்..அப்படியே முயற்சி செய்தாலும் அதன் அமைப்பு முதலில் அதன் உள்ளே இருக்கும் செல்களை அழிக்கும் அதற்கு பிறகே அந்த பெட்டி அழியும்...அல்லது திறக்கும்.."என்றாள்

"இது எப்படி சாத்தியம்" என்றான்

"அது மிக  குறைந்த அளவு மின்சாரம் கொண்டு செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது...அதோடு சூரிய ஒளியில இருந்து தானாகவே தனக்கு தேவையான மின்சாரத்தை அது எடுத்துகொள்ளும்...அதை யாராவது அதற்குண்டான எழுத்துக்கள் இல்லாமல் திறக்க முயன்றால் அதன் மொத்த மின்சாரம் ஒன்றுபட்டு அதன் உள்ளே உள்ள செல்களை அழித்துவிடும்..."என்றாள்

இதை கேட்டுக்கொண்டு இருந்த நிஷி”ஒரு மிக முக்கியமான மனிதரை தேவையில்லாமல் கொன்று இருக்கிறார்கள்” என்றது.

"என்ன நிஷி அந்த செல்களை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டாயா?"என்றான்

"ஆமாம் மிக சிரமப்பட்டு அதை உருவாக்கி இருக்கிறார்" என்றது நிஷி

   "அதற்குள் நிஷி அந்த செல்களை பற்றி முழுவதும் தெரிந்துகொண்டு விட்டதா? இது எப்படி சாத்தியம்?" என்றாள் புனிதா ஆச்சர்யமாக

"சொல்லி இருக்கிறேன் இது சாதாரண நாய் இல்லை என்று" என்றான்

  "இருந்தாலும் பல ஆண்டுகள் ஆராய்ச்சிகள் செய்து கண்டுபிடித்ததை இது எப்படி சில நிமிடங்களில் புரிந்து கொள்ள முடியும்" என்றாள்

  "நிஷி இரண்டு விதமான மூளைத்திறன் கொண்டு செயல்படும்..ஒன்று இயற்கையானது..மற்றொன்று செயற்கை...அந்த செயற்கை மூளை ஒரு மெமரி சிப்பை வைத்து செயல்படும்.......அதே நேரத்தில் இந்த செயற்கை,இயற்கை என இரண்டு மூளைகளையும் ஒன்றாக இணைத்து அதனால் வேலை செய்ய முடியும்...இதன் அமைப்பு எல்லாமே நானோ முறையில் வடிவமைக்கப்பட்டது" என்றான்.

அவள் நிஷியை ஆச்சர்யமாக பார்த்தாள்...

“நானோ என்றால் உனக்கு என்ன என்று தெரியுமா?” என்றான்

“நானும் சுஜாதா புத்தகங்கள் நிறைய படித்து இருக்கிறேன்” என்றாள்

“இப்போது தேவையானதை மட்டும் பேசுங்கள்” என்றது நிஷி

"சரி அடுத்து என்ன செய்வது நிஷி?" என்றான்.

“முதலில் இவளை இப்போதைக்கு இங்கு இருந்து போகவிடு....குற்றவாளி தேடுதலை விரிவாக்க சொல் போதும்” என்றது நிஷி

கணேஷ் அவளின் முகவரியை வாங்கிவிட்டு பிரியமனமில்லாமல் போகச்சொன்னான.....

0 comments: